செய்திகள் :

"கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும்!” - முதியோர் இல்லத்தில் 70 வயதில் காதல் திருமணம்!

post image

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 70 வயது முதியவர்கள் இருவர், திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

72 வயதான கோவிந்தன் நாயர் மற்றும் 70 வயதான சரஸ்வதி அம்மா ஆகியோருக்கிடையே, காதல் மலர்ந்து திருமணம் மூலம் ஒருவரையொருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக முதியோர் இல்லத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், நல்ல நட்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Marriage

இந்த நட்பு காலப்போக்கில் ஆழமான காதலாக மாறி, இருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

முதியோர் இல்ல நிர்வாகத்தின் ஆதரவுடன், எளிமையான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் நண்பர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

"வயதானாலும் மனதில் காதல் இளமையாக இருக்கிறது. இந்த வயதில் எங்களுக்கு இப்படியொரு பந்தம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என கோவிந்தன் நாயர் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.

சரஸ்வதி அம்மாவும், "இந்தத் திருமணம் எங்கள் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தை அளித்துள்ளது" என்று கூறினார்.

முதியோர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, காதல் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடிய முதியோர் இல்ல நிர்வாகம், மணமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Relationship: வளர்ந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கான பிரிவு; பெற்றோர் பாசிட்டிவாக கடப்பது எப்படி?

அம்மாவின் முந்தானையைப் பிடித்து வளர்ந்த மகனாக இருந்தாலும் சரி, தந்தையின் மடியில் படுத்து... செல்லமாய் சிணுங்கி... அடம் பிடித்து அழுது ஐபோன் வாங்கிய மகளாக இருந்தாலும் சரி, மேல்படிப்பு, வேலை, திருமணம் எ... மேலும் பார்க்க

Relationship: நீங்கள் Toxic நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் (Toxic Relationship). 2 கே கிட்ஸ் மத்தியில் அதிகம் பேசப்படுகிற ஒரு வார்த்தை. அதென்ன டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்? சிம்பிளாக சொன்னால், நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிற நபருடன் நேரம் செலவழி... மேலும் பார்க்க

Relationship: தாம்பத்தியத்தின் 5 நிலைகளும் இரண்டரை வருடங்களும்..!

'ஒரு தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அன்புகூருவதற்கு இரண்டரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது சில மூத்த தம்பதியரின் அனுபவ கருத்து. அது என்ன இரண்டரை ஆண்டுகள்..?happy coupleஅந்த ஈர்ப்பிலேயே முதல் வருடம்... மேலும் பார்க்க

உசிலம்பட்டி: `தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழந்த சம்பவம்' - தந்தையர் தினத்தில் நடந்த சோகம்

தந்தையர் தினத்தன்று தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர்... மேலும் பார்க்க