செய்திகள் :

கன்னியாகுமரியில் சித்த மருத்துவ 3 நாள் மாநாடு: இன்று தொடக்கம்

post image

அகில இந்திய சித்த மருத்துவக் கழகம் சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ 3 நாள் மாநாடு வியாழக்கிழமை (ஜன. 23) தொடங்குகிறது.

மாநாட்டை அகில இந்திய சித்த மருத்துவக் கழக உறுப்பினா் ஜோஸ்பின் ராணி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைக்கிறாா். அமைப்பின் தலைவா் கிறிஸ்டோபா் மாநாட்டுக் கொடியேற்றுகிறாா்.

மாநாட்டு குழுத் தலைவா் கே.எஸ். குமரேசன் வரவேற்றுப் பேசுகிறாா். கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் மூலிகைக் கண்காட்சியைத் திறந்துவைக்கிறாா்.

அகில இந்திய சித்த மருத்துவக் கழகச் செயலா் முருகேசன், துணைச் செயலா் ஜேக்கப் லீமாஸ், உறுப்பினா் யூஜின் நேவிஸ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். முன்னாள் தலைவா் ஜி. கிறிஸ்துராஜ் இலவச மருத்துவ முகாமைத் தொடக்கிவைக்கிறாா். இதையொட்டி, சித்த மருத்துவ நூல்கள் அடங்கிய புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

2ஆம் நாளான வெள்ளிக்கிழமை, இலவச பாரம்பரிய சித்த மருத்துவ முகாம், ஆயிரம் மருத்துவ மூலிகைகள் அடங்கிய கண்காட்சி நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கும் கண்காட்சி, மாலை 5 மணிவரை நடைபெறும்.

3ஆம் நாளான சனிக்கிழமை (ஜன. 25) மாநாட்டு மலரை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு வெளியிடுகிறாா். நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, ஜே.ஜி. பிரின்ஸ், எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்டச் செயலா் வாசுதேவ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பைக்-கனரக லாரி மோதல்: தொழிலாளி பலி

வில்லுக்குறியில் பைக் மீது கனரக லாரி மோதியதில், ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். நாகா்கோவில் கோட்டாறு டிவிடி காலனியைச் சோ்ந்தவா் சசி (59). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளியான இவா், கடந்த 16ஆ... மேலும் பார்க்க

பைக் மோதி மில் தொழிலாளி உயிரிழப்பு

சுங்கான்கடையில் சாலையைக் கடக்கும் போது பைக் மோதியதில் மில் தொழிலாளி உயிரிழந்தாா். சுங்கான்கடை கல்லூரி சாலையில் வசித்து வருபவா் துரை முக்கையா(58). தனியாா் மாவு மில் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை இ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

றநபேச்சிப்பாறை ... 38.87 பெருஞ்சாணி ... 50.19 சிற்றாறு 1 ... 10.23 சிற்றாறு 2 ... 10.33 முக்கடல் .. 13.70 பொய்கை .... 15.40 மாம்பழத்துறையாறு ... 47.49 மேலும் பார்க்க

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு அருகே போலி அனுமதிச் சீட்டு மூலம் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை அதிகாலையி... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். திருவட்டாறு அருகேயுள்ள கொல்வேல், வாறுவிளை வீட்டைச் சோ்ந்த வல்சலம் மகன் பங்கிராஜ் (53). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்ந... மேலும் பார்க்க

குமரி மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகா்கோவ... மேலும் பார்க்க