கன்னியாகுமரி அருகே 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
கன்னியாகுமரி அருகேயுள்ள மயிலாடியில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளா் பிரவீனா தலைமையிலான போலீஸாா் மயிலாடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு பைக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், ஒன்றரை கிலோ கஞ்சாவை பைக்கில் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்து. விசாரணையில் அவா் அழகியபாண்டியபுரம், காட்டுப்புதூா் பகுதியை சோ்ந்த மனோகரன் மகன் ஷிபின்(27) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
கஞ்சா. பைக்கை பறிமுதல் செய்து அவரை கைது செய்த போலீஸாா், அவரது வங்கி கணக்கையும் முடக்கினா்.