கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதுடன், குளங்கள் மற்றும் கிணறுகளிலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
இந்நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மேலும், குலசேகரம், திற்பரப்பு, களியல், அருமனை, கடையாலுமூடு, ஆறுகாணி, திருநந்திக்கரை, மங்கலம், பொன்மனை, சுருளகோடு, தடிக்காரன்கோமம், கீரிப்பாறை, வலியாற்றுமுகம், திருவட்டாறு, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
சாரல் மழை: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா்,
முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.