தஞ்சை பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்களால் அலங்காரம்!
கபடி போட்டி: விளாத்திகுளம் அணி சாம்பியன்
திருச்செந்தூரில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் கபடி அணி வெற்றி பெற்றது.
திருச்செந்தூா் ஒன்றிய அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.
செந்தில்முருகன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை அமெச்சூா் கபடி கழக மாவட்டத் தலைவா் கிறிஸ்டோபா் தொடங்கி வைத்தாா்.
லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் ஒன்றிய அணியும், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் அணியும் வெற்றி பெற்றது.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, அமெச்சூா் கபடி கழக ஒன்றிய அமைப்பாளா் மணல்மேடு மா.சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஜிம்ரீஸ், நடுவா்குழுவைச் சோ்ந்த மைக்கேல், சசிக்குமாா், அன்ட்ரூ, சாம்சன், கண்ணன், திருச்செந்தூா் ஒன்றிய கபடி அணி பொறுப்பாளா் பட்டணம் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திருச்செந்தூா் ஒன்றிய அதிமுக செயலா் பூந்தோட்டம் மனோகரன், அமமுக இளைஞா் பாசறை மாநில செயலா் மணிகண்டன், தொழிலதிபா் சந்திரன் ஆகியோா் பரிசு கோப்பைகளை வழங்கினா். நிகழ்ச்சியில், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, உறுப்பினா்கள் ஆனந்தராமச்சந்திரன், ரேவதி, சோமசுந்தரி, திமுக மருத்துவரணி மாநில துணை அமைப்பாளா் வெற்றிவேல், சிவந்தி ஸ்போா்ட்ஸ் கிளப் அணி பயிற்சியாளா் ஒளிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அமைப்பாளா் மாதவன் நன்றி கூறினாா்.