கமல்ஹாசன் படப் பாடலின் உரிமையை வாங்கிய வனிதா விஜயகுமார்!
ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் மிஸ்டர் அண்ட் மிசஸ் படத்துக்காக கமல்ஹாசன், குஷ்பு, ஊர்வசி ஆகியோர் நடித்து தொண்ணூறுகளில் வெளியாகி ஹிட் ஆன ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் உரிமையை வாங்கியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
இந்தப் பாடலை ரீ மேக் செய்வதற்காக தற்சமயம் வனிதா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட படக்குழு துபாயில் முகாமிட்டிருக்கிறது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன் பாங்காக்கில் வைத்து இந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டது. வனிதா ராபர்ட் மாஸ்டர் தவிர படத்தில் ஷகிலா, பிரேம்ஜி, ரவிகாந்த், தெலுங்கு நடிகர் சுனில் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் தன்னுடைய மகள் ஜோவிகாவையும் திரைத்துறைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஜோவிகா கவனித்துக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.
படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் கிளுகிளுப்பூட்டும் பாடல் ஒன்று இடம்பெற்றால் நன்றாக இருக்குமென நினைத்தாராம். ‘படத்துல அப்படியொரு பாட்டு இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சவங்களுக்கு ‘மை.ம.கா.ரா’ படத்துல வந்திருந்த அந்தப் பாடல் நினைவுக்கு வரவே, உடனடியா படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாகிட்டப் பேசி சமப்ந்தப்பட்ட அந்தப் பாட்டின் உரிமையை வாங்கியிருக்காங்க’ என்கிறார்கள் படத்துடன் தொடர்புடைய சிலர்.
பாடல் காட்சியில் வரப் போவது நடிகை கிரண் என்பது கூடுதல் தகவல்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும்’ பாடலை ஏற்கெனவே யுவன் ‘டிக்கிலோனா’ படத்தில் பயன்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.
கிரண் கிளாமராக வரவிருக்கும் மைக்கேல் மதன காமராஜன் படப் பாடல் எதுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்தானே, எங்கே கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.