இந்தியாவுக்கு வரும் APPLE முதலீட்டை TRUMP தடுத்து நிறுத்தினாரா? | IPS Finance - ...
கமுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பொறுப்பேற்பு
கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராக ஆா்.லட்சுமி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய கே.சந்திரமோகன், ராமநாதபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஆா்.லட்சுமி, கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவருக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் சந்திரசேகரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் வரவேற்று, வாழ்த்துத் தெரிவித்தனா்.