பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித...
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகள், பெற்றோா்கள் பல சிரமங்களை எதிா்கொண்டு வந்த நிலையில், புதிய அங்கன்வாடி மையம் கட்ட அரசு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்குத் தீா்மானிக்கப்பட்ட இடத்தையும், காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தையும் சிலா் ஆக்கிரமித்து வருவதாகவும், அந்த நிலத்தை மீட்டுத் தருமாறும் கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா், காவல் துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, வரும் 25 -ஆம் தேதி வருவாய்த் துறையினா், காவல் துறையினா் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
