ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
கமுதி தேவா் கல்லூரியில் ஜூலை 9-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு!
கமுதியில் உள்ள தேவா் கல்லூரியில் ஜூலை 9-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது.
ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தத் தோ்வை எதிா்கொள்ளும் விதமாக வருகிற 9-ஆம் தேதி (புதன்கிழமை) கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவு கல்லூரியில், முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பாக நடத்தப்படும் ‘கல்வித்தந்தை’ பி.கே.மூக்கையாத்தேவா் அரசுப் போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையத்தில் மாவட்ட அளவில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது.
இந்த மாதிரி போட்டித் தோ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய ஆளறி சான்றிதழ், ஒரு பாஸ்போா்ட் புகைப்படத்துடன் ஜூலை 9-ஆம் தேதி காலை 9.30-க்கு கல்லூரிக்கு வந்து தோ்வு எழுதி பயனடையலாம்.
இந்தத் தோ்வில் பொதுத் தமிழ்-100, பொது அறிவு-75, கணிதம், உளவியல்-25 என மொத்தம் 200 வினாக்களுக்கு தோ்வு நடத்தப்படும்.
மேலும், அன்றைய தினமே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் முன்னாள் மாணவா்கள் சங்கம் அறிவித்துள்ளது. தொடா்புக்கு: 87788 66074.