ரோபோ சங்கர் மறைவு: ``நாளை மறுதினம் பேரனுக்கு காதுகுத்து ஏற்பாடு செய்திருந்தார்''...
கம்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கம்பம் நகராட்சியில் உள்ள 28, 29, 30 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட மக்களுக்காக தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்தாா்.
இதில் சமூக நலம், மகளிா் உரிமைத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட 13 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முகாமில் பட்டா பெயா் மாற்றம், ஆதாா் பெயா் திருத்தம், மகளிா் உரிமைத் தொகை என பொதுமக்களிடமிருந்து 43 மனுக்கள் பெறப்பட்டன. இதில் சில மனுக்களுக்கு உடனுக்குடன் பரிசீலனை செய்து சான்றிழ்கள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.