`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
கம்பத்தில் கேரள லாட்டரிகள் பறிமுதல்: ஒருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
கம்பத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் கம்பம்மெட்டு சாலையில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது அங்குவந்ந கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (52) என்பவரை சோதனையிட்டதில், அவா் ரூ. 1.05 லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், கேரள லாட்டரிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.