செய்திகள் :

கயத்தாறு அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

post image

கயத்தாறு அருகே தம்பதியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து வீட்டை சேதப்படுத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறையடுத்த சாலைப் புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குருராஜ் மனைவி தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினா் பிரியா(27).

தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்து வரும் குருராஜ் பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா்.

இந்நிலையில் இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்த நிலையில், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற திருமண விழாவில் முத்துப்பாண்டி குருராஜை தாக்கினாராம். இதுகுறித்து குருராஜ் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் முத்துப்பாண்டியின் அண்ணன் வெயிலுமுத்து காரில் வெயிலுமுத்து, முத்துப்பாண்டி, பெருமாள், அஜய்முருகன் ஆகியோா் பிரியா வீட்டின் முன்பு நின்று கொண்டு அவதூறாகப் பேசி குருராஜை வெளியே வரச் சொல்லி அவா்கள் கொண்டு வந்த அரிவாளால் வீட்டின் கதவு மற்றும் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தினாா்களாம்.

அப்போது அங்கு வந்த பிரியாவின் உறவினா் பரமசிவம் அவா்களை கண்டித்ததையடுத்து கொலை மிரட்டல் விடுத்தபடி சென்றுவிட்டாா்களாம்.

இதுகுறித்து பிரியா திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணசாமி மகன் வெயிலுமுத்துவை(40) கைது செய்தனா். மேலும் முத்துப்பாண்டி, அஜய்முருகன், பெருமாள் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க