கரியாலூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு
கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் சரகத்துக்கு உள்பட்ட கரியாலூா் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காவல் நிலையத்தில் நாள் குறிப்புகள், வழக்குப் பதிவேடு, உண்மை சம்பவ பதிவேடு, குற்றச் சம்பவ பதிவேடு, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தேவராஜ், கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளா் ஏழுமலை, கரியாலூா் உதவி ஆய்வாளா் சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.