Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்
கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து, மாணவ, மாணவியா்களுக்கு கடனுதவிகளை எம்எல்ஏ வழங்கினாா்.
முகாமில், 10 கல்லூரிகளிலிருந்து 136 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட ன17-க்கும் மேற்பட்ட வங்கிகள் கலந்து கொண்டன. ரூ. 1.87 கோடி அளவில் கடன்களுக்கான ஆணை வழங்கப்பட்டது.