கருங்கல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞா் பலி
கருங்கல் அருகே உள்ள கட்டப்புளி பகுதியில் பனைமரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்த ராபின்சன் மகன் ரெஜின் (30). கூலித் தொழிலாளியான இவா், கட்டப்புளி பகுதியில் பனை மரத்தில் நொங்கு பறிக்க புதன்கிழமை ஏறும்போது தவறி விழுந்தாா். அப் பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.