பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!
கருங்களத்தூா் கிருஷ்ணா் கோயிலில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கருங்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாபா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல், இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மூன்றாம் கால, நான்காம் கால பூஜைகள் நடைபெற்றன. பிறகு யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் கலசங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாசாரியா்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தனா்.

இதன் பிறகு கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அம்பாள், சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.