செய்திகள் :

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி!

post image

அதிமுக அமைப்புச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த திருத்து பகுதியில் உடல்நலக் குறைவு காரணமாக கருப்பசாமி பாண்டியன் புதன்கிழமை காலை காலமானார்.

இதையும் படிக்க : கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி!

இந்த நிலையில், அவரின் உடலுக்கு ஓ. பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

”அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதிமுகவை மிகப் பெரிய பேரியக்கமாக உருவாக்குவதற்கு இதயபூர்வமாக உழைத்தவர்.

அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். எந்தச் சூழலிலும் உதவி என்று யார் தன்னை நாடி வந்தாலும் உதவியவர். அனைத்து தரப்பினருக்காகவும் உழைத்தவர். பொதுச் சேவையை நிறைவாக செய்தவர்.

அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1982-ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது. அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியில் திளைக்கட்டும்.

பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்” என்றார்.

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் பார்க்க