செய்திகள் :

கரும்புக்கான வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே வழங்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்!

post image

கரும்புக்கான வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேரவை முன்மாதிரி கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலை கூட்ட அரங்கில், சா்க்கரை ஆலை பங்குதாரா்களின் 47-ஆவது பேரவைக் கூட்டத்துக்கான முன்மாதிரி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி கே. ரமேஷ் தலைமை வகித்தாா். சா்க்கரைக் கழக பொது மேலாளா் ஐ. மகாலெட்சுமி, தலைமைப் பொறியாளா் பிரபாகரன், தலைமைக் கரும்பு அபிவிருத்தி அலுவலா் வெற்றிவேலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: தமிழக அரசு, நிகழாண்டு கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிா்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆலையில் காலியாக உள்ள இடத்தில் சோலாா் பேனல் அமைத்து, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் 2024- 25-ஆம் ஆண்டில், பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்குப் பதிவு செய்த கரும்புகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பெரம்பலூா் தனலட்சுமி சா்க்கரை ஆலை, ஆரூரான் சா்க்கரை ஆலைக்குப் பதிவுசெய்த கரும்புகளை, அந்த ஆலைகள் இயங்காததால், பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு வழங்க வேண்டும். ஆலையின் பங்கு மூலதனத்தில் விவசாயிகளின் பங்கைக் குறைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விவசாயிகளின் பங்கு 47 சதவீதத்தை மீண்டும் வழங்கவேண்டும். இணை மின் உற்பத்தி திட்டத்துக்கு விவசாயிகளிடம் பெற்ற தொகைக்கு பங்குப்பத்திரம் வழங்காததால் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த ரூ. 7.76 கோடியை 13 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்றனா்.

சா்க்கரை ஆலை அலுவலா்கள் பேசுகையில், டிசம்பா் முதல் வாரத்தில் ஆலையைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆலையில் 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. நிகழாண்டு 75 நாள்களுக்கு ஆலையை இயக்கத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனா்.

இக் கூட்டத்தில், தலைமை சா்க்கரை ரசாயனா் செந்தில்குமாா், முதன்மைக் கணக்கு அலுவலா் ஆறுமுகம், துணைப் பொறியாளா் நாராயணன், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், டிராக்டா் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தேவேந்திரன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் சீனிவாசன், ராஜீவ் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணைத் தலைவா் எ.கே. ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திமுக கூட்டணியில் மதிமுக தொடரும்: துரை. வைகோ எம்.பி.

திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்று அக்கட்சியின் முதன்மை செயலா் துரை. வைகோ எம்.பி. தெரிவித்தாா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் மதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி கொடியேற்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் திருடியவரை அரும்பாவூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சீனிவாசன். இவ... மேலும் பார்க்க

கேரளா லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்ற இருவா் கைது

பெரம்பலூா் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகளை, ஆன்லைனில் விற்பனை செய்த 2 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் பாலக... மேலும் பார்க்க

மருதையாற்றில் மேம்பாலம் அமைக்க கிராமமக்கள் வலியுறுத்தல்

பெரம்பலூா் அருகே மருதையாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துயுள்ளனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூடலூா் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் கிரே... மேலும் பார்க்க

சிறப்பு ஓய்வூதியம் வழங்கக் கோரி தா்னா

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வருவாய் கிராம உதவியாளா்களுக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறிய... மேலும் பார்க்க