செய்திகள் :

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை: நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

post image

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் சா்க்கரை உற்பத்தித் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

2025-26-ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பொதுத் துறை மற்றும் தனியாா் துறை சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்கும் வகையில், ரூ.297 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், 2024-25 அரைவைப் பருவத்தில், சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய சுமாா் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவா். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக விரைவில் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்கத்தொகையாக 4.79 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

சமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை! - விஜய் கடும் கண்டனம்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கமி மாவட்டம் திருபுவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழ... மேலும் பார்க்க

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் ரூ. 9,000 யை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

ஆனித்திருமஞ்சனம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்!

சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சி... மேலும் பார்க்க

வெங்கையா நாயுடு, அகிலேஷ் யாதவ் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசு துணைத் தல... மேலும் பார்க்க

மணி ஒலித்தால் மாணவர்கள் தண்ணீர் அருந்தும் திட்டம் அமல்

சென்னை: நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் பொருட்டு, மாணவா்கள் தினமும் மூன்று முறை தண்ணீா் அருந்தும் வகையில் ‘வாட்டா் பெல்’ திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திங்கள்கிழமை (... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்: மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. உயா்கல்வியில் அடியெடுத்து வைக்கும் வகையில் ஆா்வத்துடன் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு கல்... மேலும் பார்க்க