செய்திகள் :

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி நிலுவை வைத்துள்ளன சர்க்கரை ஆலைகள்!

post image

புதுதில்லி: அரசு தரவுகளின் அடிப்படையில், நடப்பு ஆண்டு 2024 அக்டோபர் முதல் மார்ச் 5ஆம் தேதி வரை சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா, விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல் முறையாகும் என்றார்.

விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதற்கு வசதியாக, கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையை நிர்ணயிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில், உபரி சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிட அனுமதித்துள்ளது.

நடப்பு ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை சர்க்கரையின் விலை வீழ்ச்சியடைவதையும் மற்றும் கரும்பு நிலுவைத் தொகை குவிவதைத் தடுக்க, 10 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்தது. அதே வேளையில் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.31 ஆக நிர்ணயித்தது.

இதனால் 99.9 சதவிகிதத்திற்கும் அதிகமான கரும்பு நிலுவைத் தொகை 2023-24ல் செலுத்தப்பட்டது. நடப்பு சர்க்கரை பருவம் 2024-25ல் மார்ச் 5, 2025 நிலவரப்படி 80 சதவிகிதத்திற்கும் அதிகமான கரும்பு நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

கரும்பு விவசாயிகளின் மொத்த நிலுவைத் தொகை ரூ.15,504 கோடியாகும். இது உ.பி.யில் உள்ள சர்க்கரை ஆலைகள் ரூ.4,793 கோடியும், கர்நாடகவில் ரூ.3,365 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.2,949 கோடியும், குஜராத்தில் ரூ.1,454 கோடியும் ஆகும்.

இதையும் படிக்க: ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.அமெரிக்கத் தொழிலதிபருக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்... மேலும் பார்க்க

எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம்!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், ... மேலும் பார்க்க

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சோ்ந்த சா்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளா்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன... மேலும் பார்க்க

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு

முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

எலான் மஸ்க் உடன் இணையும் ஏர்டெல்!

நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக... மேலும் பார்க்க