சொந்த ஊர் சென்று திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றுங்கள்: போக்குவரத்துத்துறை
கரூரில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு அபாயம்
கரூா்: கரூரில், கோவைச் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட கோவைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை பொதுமக்கள் கொட்டி வருகிறாா்கள்.
குப்பைகள் கொட்டப்பட்டு சுமாா் ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் என்பதால் குப்பையில் இருந்து வீசும் துா்நாற்றத்தால் சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல முடிவதில்லை. மேலும் தேங்கிக்கிடக்கும் குப்பையால் அப்பகுதியினருக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தபட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதியினா் கூறியது, அண்மையில் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு ஊராட்சி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ஊராட்சியை இணைக்கும்போது, குப்பைகளை உடனே அகற்றுதல், நாள்தோறும் குடிநீா் வசதி ஏற்பாடு என பல்வேறு காரணங்களை கூறி இணைத்தனா். ஆனால் அறிவிப்பு வந்து இரு வாரங்களாகியும் இங்கு குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றனா் அவா்கள்.