`UPSC-ல தேர்ச்சி பெற General Studies-ல கூடுதல் கவனம் செலுத்துங்க!' - Selvanagara...
கரூரில் பலத்த மழை
கரூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து கரூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கிய இந்த மழை 2.45 மணி வரை நீடித்தது. மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல ஓடியது. மேலும் திருமாநிலையூா், சுங்ககேட், திருக்காம்புலியூா் ரவுண்டானா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும் கோடை வெயில் கடந்த ஒரு வாரமாகவே மக்களை வாட்டி வதைத்த நிலையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.