வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கி...
கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார்
கரூரில் பெண் குரல் போல இருக்கும் மாணவரை பள்ளி ஆசிரியர் கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்வதாக பாதிக்கப்பட்ட அம்மாணவர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்.
10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், தனது குரல் பெண் குரல் போல இருப்பதால் கரூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் செந்தில்குமார், கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாகும்படி பேசுவதாகவும், பாலியல் சீண்டல் செய்வதாகவும் மிகுந்த வருத்தத்துடன் பேட்டியும் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் மாணவர், "என் குரல் பெண் குரல்போல இருப்பதால் என் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் செந்தில்குமார் வகுப்பில், பள்ளியில் எல்லோர் முன்பும் மன உளைச்சலுக்கு ஆளாகும்படி கிண்டல் செய்கிறார், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலும் செய்கிறார், ஆபாசமாக பேசுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலடைந்திருக்கிறேன். எனக்குப் படிக்க ரொம்ப ஆசை. ஆனால், இந்த மன உளைச்சலால் கடந்த 6 நாள்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை.
இதுபோன்ற ஆசியர்களை சும்மாவிடக்கூடாது. இதில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற ஆசிரியர்கள் உருவாக மாட்டார்கள். பாலினம், பாலியல் ரீதியாக மாணவர்களை துன்புறுத்தும் ஆசியர்களுக்கு இது பாடமாக இருக்கும்.

அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலினம், பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் இனி எங்கும் நடக்கக் கூடாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் தெரிவித்துப் பேசியிருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs