செய்திகள் :

கரூர்: `விஜய் கைது செய்யப்படுவாரா?' - ஸ்டாலின் பதில்; சென்னையில் விஜய் வீட்டிற்கு பாதிகாப்பு

post image

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை சந்திக்க இன்று அதிகாலையிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்றுவிட்டார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின் பேசியதாவது:

"ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழப்பு என்பது இதுவரை நடக்காதது, இனியும் நடக்கக்கூடாதது.

கரூர்: விஜய் பரப்புரை
கரூர்: விஜய் பரப்புரை

இழப்பீடு, விசாரணை

இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அது முதலமைச்சர் பொது நிதியிலிருந்து வழங்கப்படும்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இன்று காலை 9.30 மணிக்கு நான் வரலாம் என்று டிக்கெட் பதிவு செய்திருந்தேன். ஆனால், இந்தக் கொடூரமான காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது மனசு கேட்கவில்லை. அதனால் தான், முன்கூட்டியே 1 மணியளவில் விமானம் பிடித்து வந்துவிட்டேன்.

ஸ்டாலின் | கரூர்
ஸ்டாலின் | கரூர்

விஜய் கைது செய்யப்படுவாரா?

ஆணையத்தின் அறிக்கையின்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார். செய்யப்பட மாட்டார்கள் என்று நீங்கள் கேட்கும் எந்த எண்ணத்திற்கும் நான் ஒத்துழைக்கத் தயாராக இல்லை" என்று கூறியுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் வாசலில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கரூர்: 'அம்மாவுக்கு முத்தம் கொடுப்பா..' - உயிரிழந்த ஒன்றைரை வயது குழந்தையின் தாய் உருக்கம்

கரூரில் விஜய்யின் பரப்புரைக்காக கூடிய கூட்டத்தில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அடக்கம். விஜய் பரப்புரை செய்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த ஒன... மேலும் பார்க்க

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியை சந்தித்த நிர்மல் குமார்; தவெக வைத்த கோரிக்கை என்ன? நாளை விசாரணை

கரூர் துயர சம்பவம் குறித்து நாளை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடக்க உள்ளது. இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

கரூர்: ``ஆம்புலன்ஸ் வந்ததால்தான் பிரச்னையே" - பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன?

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல... மேலும் பார்க்க

கரூர்: `இது சினிமா ஷூட்டிங் இல்லை, விஜய் மக்களுடன் நின்றிருக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல... மேலும் பார்க்க

கரூர்: 'எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்'- செல்வப்பெருந்தகை

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: 'உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம்; காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம்' - மோடி அறிவிப்பு

கரூர் துயர சம்பவத்திற்கு நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார் இந்திய பிரதமர் மோடி. தற்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் மோடி. அது குறித்து பிரதமர்... மேலும் பார்க்க