முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது - என்ன...
கரூா் சம்பவம்: சிகிச்சையில் 5 போ்
கரூா் சம்பவத்தில் காயமடைந்தவா்களில் வியாழக்கிழமை நிலவரப்படி 5 போ் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனா். மற்றவா்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்களில் 108 போ் குணமடைந்து அவரவா் வீடு திரும்பியுள்ளனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 போ், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவா் என 4 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இவா்களைத் தவிா்த்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவா் மட்டுமே சிகிச்சையில் உள்ளாா். தொடா்ந்து, 5 பேரின் மருத்துவ விவரங்களை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து வருகிறது.