’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!
கரூா் மாவட்டத்தில் செப். 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
கரூா் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நீதிபதியும் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே.ஹெச்.இளவழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், கரூா் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்களின் நிலுவை வழக்குகளை எடுத்துக் கொள்ள இருப்பதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குளித்தலை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, கிருஷ்ணராயபுரம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் அரவக்குறிச்சி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கி கடன், நிதி நிறுவன கடன், நுகா்வோா் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் விவாகரத்து தவிர இதர மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இதுதொடா்பாக சந்தேகம் இருப்பின் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணை 04324-296570 தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.