TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
கர்நாடகாவில் முதல்வர் மாற்றமா? - சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என்ன சொல்கிறார்கள்?
கர்நாடகாவில், தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் டி.கே சிவக்குமாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற குரல் வலுபெற்று வருகிறது.
அதற்கான அவசியம் இருக்கிறதா என்று காங்கிரஸ் மேலிடமும் காங்கிரஸின் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்து, ஆழம் பார்த்து வருகிறது.

டி.கே சிவக்குமார் என்ன சொல்கிறார்?
இந்த நிலையில் டி.கே சிவக்குமார் இன்று பேசுகையில், "என்னிடம் என்ன வழி இருக்கிறது? நான் அவருக்கு ஆதரவாக நின்று, அவரை ஆதரிக்க வேண்டும். கட்சி மேலிடம் என்ன கூறுகிறதோ, அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ, அது நிறைவேற்றப்படும்.
நான் யாரிடமும் எனக்கு ஆதரவாகப் பேச சொல்லவில்லை. ஒரு முதலமைச்சர் இருக்கும்போது, இந்த மாதிரியான விஷயங்களுக்கு கேள்வியே கிடையாது. நான் மட்டுமல்ல... நிறைய பேர் கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள். கட்சிக்காக லட்சக்கணக்கான கட்சி தொண்டர்கள் உழைத்திருக்கிறார்கள், முதலில் அவர்களைப் பற்றி யோசிப்போம்" என்று பேசியிருந்தார்.
சித்தராமையா பதில்
மேலும், இப்போதைய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நான் தான் ஐந்து ஆண்டுகளுக்கு கர்நாடகாவின் முதலமைச்சர். அதில் எதாவது சந்தேகம் உள்ளதா?" என்று சொல்லியிருக்கிறார்.
ஆக, இப்போதைக்கு கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் இல்லை என்பது தெளிவாகிறது.