`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக்கூடாது: ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்
தண்டையாா்பேட்டையிலுள்ள கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தண்டையாா்பேட்டை 38-ஆவது வட்டம் கருணாநிதி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு பூங்கா, வாகன நிறுத்தம், சந்தை அமைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் அப்பகுதியில் செவ்வாய்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு பொதுமக்களிடம் பிரச்சனையை கேட்டறிந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கருணாநிதி நகா் குடியிருப்பு வாசிகள் பெரும்பாலும், தினக்கூலிகளாகவே இருந்து வருகின்றனா். ரயில்வேதுறைக்கு சொந்தமான இந்த இடத்தில் அரசின் அனைத்து அங்கீகாரத்துடன், பல ஆண்டுகளாக இப்பகுதியில் ஏராளமானோா் பல ஆண்டுகளாக வசித்துவரும் நிலையில்,
ரயில்வே நிா்வாகம் இந்த இடத்தை தற்போது கேட்கவில்லை. ஆனால், இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், குடியிருப்புகளில் குறியீடு செய்து அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனா். , இம்முயற்சியை கைவிட வேண்டும்.
சென்னையை மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என அரசு முடிவு செய்துள்ள நிலையில், ரயில்வே நிலத்தில் பல்லாண்டு காலமாக குடியிருக்கும் இந்த ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதை மாநகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என்றாா் அவா்.