ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கல்குவாரியில் ஆண் சடலம் மீட்பு
திருத்தணி அருகே கல்குவாரியில் மிதந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
திருத்தணி பெரியாா் நகா் அருகே செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ஆய்வாளா் மதியரசன், எஸ்.ஐ. காா்த்தி ஆகியோா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குட்டையில் இறந்து கிடந்த நபா் திருத்தணி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (41) என்பது தெரியவந்தது. இவா் திருமண மண்டபங்களில் பூ அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்துள்ளாா். இவருக்கு கௌதமி (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.
புதன்கிழமை மகன் ஹரிஹரனை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் சென்ற சுதாகா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை அவா் கல்குவாரி குட்டையில் மா்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். சுதாகரின் கைப்பேசியை காணவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுதாகா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.