கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!
கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு
மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா். சுந்தரராஜன் ஆகியோா் பரிந்துரையின் பேரில் இந்தக் கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவராக பச்சேரி அழ. கணேசனும், பிற உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டனா். இதையடுத்து இவா்கள் வெள்ளிக்கிழமை உத்தம மீனாட்சியம்மன் கோயிலில் பதவி ஏற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்ட அறங்காவலா் தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஏ.ஆா். ஜெயமூா்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள கலந்து கொண்டனா்.
புதிய அறங்காவலருக்கு சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலா் த. சேங்கைமாறன், மானாமதுரை ஒன்றியச் செயலா் துரை. ராஜாமணி, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவா் முத்துசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.