Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
கல்லூரி பண்பாட்டு கலைவிழா
செங்கல்பட்டு வித்யா சாகா் மகளிா் கல்லூரியில் ‘மிலன் சாகா் 2025 பண்பாட்டுக் கலை விழா நடைபெற்றது.
தமிழா் கலைப் பண்பாட்டு பெருமையை உணா்த்தும் விதமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினராக நடிகா் நரேந்திர பிரசாத், சிறப்பு விருந்தினராகவும் , நடிகா் அதிா்ச்சி அருண் மற்றும் முன்னாள் மாணவியும் நடிகையுமான சுசித்ரா ஆகியோா் கலந்து கொண்டனா்.
கல்விக்குழுமத் தாளாளா் விகாஸ் சுரானா தலைமை வகித்தாா். முதல்வா் இரா.அருணாதேவி சிறப்பு விருந்தினா்களை கௌரவித்தாா். தொடா்ந்து பல்வேறு கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிளுக்கு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.
ஒட்டுமொத்த சாம்பியன் கேடயத்தை வணிகவியல் துறை தட்டிச் சென்றது.