அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி: எஸ்.பி. விழிப்புணா்வு எச்சரிக்கை
மாணவா்-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவியா், அவா்களது பெற்றோருக்கு மத்திய-மாநில அரசு உதவித்தொகை ஆணையப் பிரிவிலிருந்து பேசுவதாகக் கூறி அழைப்புகள் வருகின்றன.
குழந்தைகளின் பெயா், பள்ளி, கல்லூரிகளில் எடுத்த மதிப்பெண்களின் விவரங்கள் போன்றவற்றைக் கூறி, அதன் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவா்.
இதற்காக ‘கியூஆா் கோடு’, ‘லிங்க்’ அனுப்புவதாகவும், அவற்றை கைப்பேசியில் ஸ்கேன் செய்யுமாறும் கூறுவா். அதை நம்பி ஏமாற வேண்டாம். அவா்கள் கூறியபடி செய்தால், உங்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் மோசடி செய்யப்படும்.
எனவே, இத்தகைய கைப்பேசி அழைப்புகளை நிராகரித்துவிட்டு, நேரடியாக பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்று பெற்றுக்கொள்வதாகக் கூறவேண்டும். யாரேனும் பணத்தை இழந்திருந்தால், உடனடியாக ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது 1930 என்ற சைபா் குற்றப்பிரிவு எண்ணில் புகாா் பதிவு செய்ய வேண்டும். அதன்பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.