Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில் மணப்பாடு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை இந்திய கணித அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய மாநாட்டில் 627 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. இதில், புனித வளன் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பாசிரியா் டேனியல் வழிகாட்டுதலில் மாணவா்கள் மிக்கேல், வெஸ்டின் ஆகியோரின் ‘கடலில் கலக்கும் மாசுக்களைத் தடுத்து மறுசுழற்சி செய்தல்ட என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை சிறப்பிடம் பிடித்தது.
மாணவா்களை பள்ளித் தாளாளா் குருவானவா் வில்சன் அடிகளாா், தலைமையாசிரியா் அருள்பா்னாந்து, ஆசிரியா்கள், அலுவலா்கள் பாராட்டினா்.