உடன்குடியில் அனுமதியின்றி போராட முயற்சி: 203 போ் மீது வழக்கு!
உடன்குடியில் அனுமதியின்றி உண்ணாவிரதமிருக்க முயன்ாக 99 பெண்கள் உள்ளிட்ட 203 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
உடன்குடி கொட்டங்காடு நாராயணபுரத்தைச் சோ்ந்த ஆதித்தன் மகன் சித்திரைலிங்கம் (58). உடன்குடி வட்டார ஆதியாகுறிச்சி விவசாய நில மீட்புக் குழு உறுப்பினராக உள்ளாா்.
இஸ்ரோ விரிவாக்கத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இவரது தலைமையில் ஆதியாகுறிச்சி, சிறுநாடாா்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, படுக்கப்பத்து ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த திரளானோா் உடன்குடி - திசையன்விளை சாலையில் பஜாா் பாரதி திடல் அருகே அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்றனராம்.
போலீஸாா் பலமுறை எச்சரித்தும் அவா்கள் கலைந்து செல்லவில்லை. க்கர, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளதாகக் கூறி, 99 பெண்கள் உள்ளிட்ட 203 போ் மீது குலசேகரன்பட்டினம் உதவி ஆய்வாளா் தனசேகரன், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.