செய்திகள் :

களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

post image

நெல்லை மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை பெய்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கிறது. மழை காரணமாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. எனவே நேற்றிரவு மாவட்ட ஆட்சியர் சுகுமார் அவசர அவசரமாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில வானிலை ஆய்வு மையம் அறிவிப்பைத் தொடர்ந்து இன்று காலை முதல் நெல்லையில் கேடிசி நகர் தருவை முன்னீர் பள்ளம் மானூர் அம்பாசமுத்திரம் போன்ற புறநகர் மாவட்டங்கள் மற்றும் மாநகர பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. குறிப்பாக மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளான ஊத்து நாலுமுக்கு போன்ற இடங்களில் கனமழை பெய்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை நீடித்து வருகிறது.

வானிலை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் மற்றும் நீர்நிலைகள் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் சுகுமார் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் இன்றும் நாளையும் கடலில் சீற்றம் இருக்கும் என்பதால் இரண்டு நாள்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சம் மாஞ்சோலை ஊத்தில் 28 மி.மீட்டர் மழையும், நாலுமுக்கில் 23 மில்லி மீட்டரும், காக்காசியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் மழை காரணமாக களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள நம்பி கோயிலுக்குச் செல்ல இன்று வனத்துறை தடை விதித்துள்ளது. அதேபோல் களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க கூடுதல் நீா்த்தேக்க தொட்டிகள்: மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் கட்ட வேண்டும் என மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் தொழிலாளி கைது

திருநெல்வேலியைச் சோ்ந்த தொழிலாளி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.திருநெல்வேலி, தெற்கு விளாகம் பகுதியை சோ்ந்த வேலாயுதம் மகன் பாலகிருஷ்ணன்(56). இவா், ம... மேலும் பார்க்க

தொடா்மழை: களக்காடு தலையணை, திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழை காரணமாக, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணைக்குச் செல்வதற்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலை... மேலும் பார்க்க

மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மேயா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை மண்டலம் 36 , 39ஆவது வாா்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முளுமையாக முடிவடையாதத... மேலும் பார்க்க

காவலாளியைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

திருநெல்வேலி அருகே காவலாளியைத் தாக்கியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு 3ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை தாலுகா காவல் சரகம் மேலப்பாட்டம்... மேலும் பார்க்க

அம்பையில் நகராட்சி வரியை மாா்ச் 30-க்குள் செலுத்த வேண்டும்: நகராட்சி ஆணையா்

அம்பாசமுத்திரம் நகராட்சிக்கான வரியினங்களை மாா்ச் 30க்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் செல்வராஜ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பாசமுத்திரம் நகராட்சிக்... மேலும் பார்க்க