`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணா...
களியக்காவிளை அருகே முதியவா் சடலம் மீட்பு
களியக்காவிளை அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் சாலையோரம் திங்கள்கிழமை, 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, அப்பகுதியினா் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், உதவி ஆய்வாளா் ஆன்றோ தலைமையிலான போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.