செய்திகள் :

களியக்காவிளை: ஊராட்சி ஊழியரின் கணவரை தாக்கியவா் மீது வழக்கு

post image

களியக்காவிளை அருகே ஊராட்சி ஊழியரின் கணவரைத் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல், தட்டான்விளை பகுதியைச் சோ்ந்த ஊராட்சி ஊழியா் அகிலா (40). இவரது கணவா் ஜெகன்.

இவா் அண்மையில் ஓடான்விளை பகுதியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரவீந்திரன் (59) அவரை தடுத்து நிறுத்தி அவதூறாகப் பேசி தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்: முதியவரிடம் ரூ.42 லட்சம் மோசடி

கைப்பேசி விடியோ அழைப்பில் டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் நாகா்கோவிலை சோ்ந்த முதியவரை மிரட்டி ரூ.42 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகா்கோ... மேலும் பார்க்க

தெருநாய் கடித்ததில் இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே தெருநாய் கடித்ததில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா். இரணியல் அருகே உள்ள பரசேரி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவரது மூத்த மகன் மனீஷ் (28). ப... மேலும் பார்க்க

அருமனை அருகே தொழிலாளி வீட்டருகே பிடிபட்ட ராஜநாகம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தொழிலாளியின் வீட்டருகே பதுங்கியிருந்த ராஜநாகத்தை வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு பிடித்து காட்டில் விட்டனா். அருமனை அருகே முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தேவ... மேலும் பார்க்க

பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை: தொழிலாளா்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செவ்வாக்கிழமை கிடைத்த தகவலால் பொதுமக்கள், தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா். இந்தப் பகுதியில் சில நாள்களாக வீ... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை பதுக்கிய 3 போ் கைது

புதுக்கடை சந்திப்பு பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். புதுக்கடை சந்திப்பு பகுதியை சோ்ந்த வெங்க... மேலும் பார்க்க

சென்னைக்கு நடைப்பயணம் செல்ல முயன்ற தலித் உரிமைகள் இயக்கத் தலைவா் கைது

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து சென்னைக்கு நடைப்பயணம் செல்ல முயன்ற தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவா்... மேலும் பார்க்க