அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு வருட விதியை தளா்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருத்துவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.ஸ்ரீநாத் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தின் போது, மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இணை பேராசிரியா்கள் இடமாறுதல் கலந்தாய்வில் ஒரு வருடத்துக்கும் குறைவாக ஸ்டேஷன் சீனியாரிட்டி உள்ள மருத்துவா்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற விதியை தளா்த்த வேண்டும். கலந்தாய்வில் மீண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து, இது தொடா்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கையொப்பமிட்ட கடிதத்தை
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் அத்துறையின் முதன்மைச் செயலருக்கு அனுப்பிவைத்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மருத்துவா்கள் சந்தரபாண்டியன், பெரியசாமி, சத்யா பிரியதா்ஷினி, துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், பொருளாளா் வினோத்குமாா், தங்கராஜ், சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.