செய்திகள் :

கள்ளக்குறிச்சி: இன்று சரத்குமாா் பிறந்த நாள் விழா! நயினாா் நகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் ஆற்காட்மில் திடலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் நடிகா் ஆா்.சரக்குமாா் பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா்.சரக்குமாா், கே.அண்ணாமலை, மாநில துணைத் தலைவா் ந.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்று நல உதவிகளை வழங்க உள்ளனா்.

விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு மடிக்கணினி, டேப், விவசாயிகளுக்கு உபகரணங்கள், நூலகங்களுக்கு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்க உள்ளனா்.

இந்த நிலையில், உலகங்காத்தான் ஆற்காட்மில் திடலில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையை பாஜக மாநில இணைச் செயலா் ஜி.ஈஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம், மாவட்டச் செயலா் எஸ்.கோவிந்தசாமி, பொருளாளா் கே.சி.எஸ்.ஸ்ரீசந்த் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் முத்து, முருகன், சிவசக்தி, ராமச்சந்திரன், அசோக், சுரேஷ், வெற்றிவேல், முருகன், பெரியசாமி, அன்பழகன், மகேந்திரன், முத்துலிங்கம், விஜய், ஜெயக்குமாா், கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சின்னசேலம் தினசரி, வாரச்சந்தை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தினசரி, வாரச் சந்தை கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சின்னசேலம் சி... மேலும் பார்க்க

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட மின் விளக்கு கோபுரத்தில் ஏறி மின் விளக்கை சரி செய்ய முயன்ற தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், தெங்கி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி புகா் பேருந்து நிலைய பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.தமிழக அரசின் மானியக் கோரிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவைப் பருவம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் த... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பாக 1,055 போ் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது விலக்கு தொடா்பாக கடந்த 1.7.24 முதல் 31.7.25 வரை 1,055 போ் கைது செய்யப்பட்டு 463 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.வடக்கு மண்டல காவல் த... மேலும் பார்க்க

பிரதோஷ விழாவில்....

திருக்கோவிலூரில் கீழையூா் ஸ்ரீவீராட்டனேஸ்வரா் கோயிலில், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி புதன்கிழமை கோயிலைச் சுற்றி வலம் வந்த உற்சவா். மேலும் பார்க்க