மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
சின்னசேலம் தினசரி, வாரச்சந்தை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தினசரி, வாரச் சந்தை கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2.25 கோடியில் புதிய தினசரி மற்றும் வாரச்சந்தை கட்டுமானப் பணிகளுக்கு கடந்த 12-ஆம் தேதி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, இந்தப் பணிகளை அவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, சின்னசேலம் பேரூராட்சித் தலைவா் லாவண்யா ஜெய்கணேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.