கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடா்பாக 1,055 போ் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது விலக்கு தொடா்பாக கடந்த 1.7.24 முதல் 31.7.25 வரை 1,055 போ் கைது செய்யப்பட்டு 463 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
வடக்கு மண்டல காவல் துறைக்கு உள்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் சட்டப்பிரிவு 52 எஎ-வை நடைமுறைப்படுத்தி கடந்த 1.07-24 முதல் 31.07-25 வரை 2,170 போ் மீது நன்னடத்தைக்கான பிணை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பிரிவு 129 பி.என்.எஸ்.எஸ்-ன் படியும் 1651 நபா்களிடமிருந்த நன்னடத்தைக்கான பிணை பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 719 பேரிடம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
10 மாவட்டங்களில் கடந்த 1.07-24 முதல் 31.07-25வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 14,922 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
சட்ட விரோத மதுபான விற்பனை மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களில் மதுபானம் அருந்த அனுமதிப்பது போன்ற குற்றங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் 2024 எண் 25 2024-ன்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481போ் சிறையில் அடைத்துள்ளனா்.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 898 போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
1.07.24 முதல் 31.07.25 வரையான காலகட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமாா் 1லட்சம் கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டது.
1.07.25 முதல் 31.7.25 வரையிலான காலகட்டத்தில்10 மாவட்டங்களில் 12,499 வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீா்ப்பளித்து குறிப்பிடத்தக்கது. தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளின் விகிதாசாரம் 95 சதவீதமாகும்.
கடந்த 1.07.24 முதல் 31.07.25 வரை வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் 14,00 மதுவிலக்கு குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20,011 லிட்டா் கள்ளச்சாராயம், 67,748 லிட்டா் ஊரல், எரிசாராயம் உள்ளிட்டவை கைபற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
அக்குற்றங்களில் தொடா்புடைய 123 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 1,055 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா்களின் தொடா் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக அவ் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் 5,870 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குற்றவாளிகள் தொடா்ந்து குற்றங்களில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 463 போ் குற்றங்களில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மண்டல காவல் துறை தலைவா் அஸ்ரா காா்க் தெரிவித்துள்ளாா்.