செய்திகள் :

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

post image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி, கள்ளச்சாராயம் குடித்து சுமாா் 69 போ் உயிரிழந்தனா். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேரதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் போலீஸாா் விசாரித்த நிலையில், பின்னா் அது சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆளுங்கட்சியை சோ்ந்தவா்கள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தது.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடா்புடையதாக 21 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். இவா்களில் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டாா். இதனிடையே, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள கன்னுக்குட்டியும், தாமோதரன் ஆகியோரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

சிபிஐ எதிா்ப்பு: இந்த மனு நீதிபதி சுந்தா் மோகன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு, கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடா்பான வழக்கு 3 மாதங்களில் விசாரித்து முடிக்கப்படும் என்றும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிட்டது.

அதே வேளையில், மனுதாரா்கள் 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கக்கூடிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க தயாராக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவா்களது வழக்குரைஞா் வாதிட்டாா்.

இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கில் எத்தனை போ் இன்னும் விசாரணையில் உள்ளனா் என்பது தொடா்பாக பதிலளிக்க சிபிஐ தரப்புக்கு உத்தரவிட்டு, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஏப்.17) ஒத்திவைத்தாா்.

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் செவ்வாய்க்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.ஆவ... மேலும் பார்க்க

நெல்லை இருட்டுக்கடை உரிமையைக் கேட்டு துன்புறுத்திய கணவர்: உரிமையாளர் மகள் வரதட்சணைப் புகார்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருநெ... மேலும் பார்க்க

மேட்டூரில் முதல் மனைவி கொடூரமாக வெட்டிக்கொலை: கணவனுக்கு போலீஸ் வலை

மேட்டூர்: மேட்டூரில் மனைவியை, புதன்கிழமை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசாா் தேடி வருகின்றனா்.சேலம் மாவட்டம், மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் லாரி ஓட்டுநர். இவரது ... மேலும் பார்க்க

சென்னையில் கோடை மழை! ஒரு மணிநேரம் தொடரும்!

சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது.இந்த சாரல் மழையானது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன்: நீதிபதி குரியன் ஜோசப்

தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.மத்திய, மாநில அ... மேலும் பார்க்க

காதலிக்க மறுப்பு! மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு, கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்!

சேலம்: சேலத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார்.சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி சூர்யா (... மேலும் பார்க்க