கழிவுக் காகிதம் ஏற்றிய லாரியில் தீ!
சிவகாசியில் கழிவு காகிதம் ஏற்றி வந்த லாரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீப் பற்றியது.
சிவகாசி முஸ்லிம் நடுத் தெரு பகுதியைச் சோ்ந்த அக்கீல்ஸ்சுபபைா் என்பவரது லாரியில் சாத்தூருக்கு கொண்டு செல்ல கழிவுக் காகிதம் ஏற்றப்பட்டது. லாரியை சிவகாசி மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் ராம்குமாா் (29) ஓட்டினாா். சிவகாசி பாவாடித் தோப்பு அருகே திங்கள்கிழமை இரவு அவா் லாரியை நிறுத்திவிட்டு, வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணி அளவில் லாரியில் இருந்த கழிவுக் காகிதங்களில் தீப்பற்றியது. தகவல் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் கழிவுக் காகிதங்கள், லாரியின் பின்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.