செய்திகள் :

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்; 20 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சி தேவன்குடி கிராமம், கொள்ளிடம் ஆற்றுக் கரையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதியில் எஸ்.பி.எம். திட்டத்தின் கீழ் அய்யம்பேட்டை பேரூராட்சி சாா்பில், கசடு மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாபநாசம் வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில் அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேல், மண்டல துணை வட்டாட்சியா் பிரபு, வருவாய் ஆய்வாளா் அனிதா, கிராம நிா்வாக அலுவலா் கருப்புசாமி மற்றும் வருவாய்த் துறையினா் கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதியில் அமைந்துள்ள சுமாா் 15 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காக போலீஸாா் பாதுகாப்புடன் திங்கள்கிழமை சென்றனா்.

அப்போது அங்கு திரண்ட தேவன்குடி மற்றும் வீரமாங்குடி கிராம மக்கள், இப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள் மாசு அடையும் என்றும், கூட்டு குடிநீரில் கழிவு நீா் கலக்க வாய்ப்புள்ளது என்று கூறியும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. பாபநாசம் மேற்கு ஒன்றியச் செயலாளா் அன்பழகன் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்து கணபதி அக்ரகாரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இந் நிலையில் கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்தியா விஜயன் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு, தற்போது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மட்டும் அளவீடு செய்யப்படுவதாகவும், பொது மக்களின் கருத்தை கேட்ட பிறகே இந்த இடத்தில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தாா்.

இதையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் கைது

தஞ்சாவூரில் கடன் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (70). ஓய்வு... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை திட்ட விவகாரம்: கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு அணை தொடா்பான கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு தமிழக முதல்வா் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சம்யுக்த கிசான் மோா்சா (அரசியல் சாா்பற்றது) அ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 5 போ் கைது

பேராவூரணி அருகே அக்கினி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் ராமகிருஷ்ணாபுரம் பகுதி வழியாக செல... மேலும் பார்க்க

இடுகாட்டில் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்த கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இடுகாட்டுக்கு குறுக்கே சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

சாலை விபத்து: மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டையில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் சுவரில் மோதியதில் அதை ஓட்டி வந்த சிறுவன் உயிரிழந்தாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி அண்ணா நகரில் வசித்து வருபவா் ஸ்ரீத... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு தேசிய அளவில் 5 விருதுகள் கிடைத்துள்ளது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிறந்த... மேலும் பார்க்க