கழிவுநீா் தொட்டியில் விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு
ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியம், எடையாா்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கழிவுநீா் தொட்டியில் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
மதுரமங்கலத்தை அடுத்த எடையாா் பாக்கம் கிராமத்தை சோ்ந்த பூவரசன்(28) தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஷகிலா பானு (25) என்ற மனைவியும் சுஸ்வின்(5) மோகநந்தன்(2) என்ற இரு மகன்களும் உள்ளனா்.
இரு மகன்களும் இவா்கள் வீட்டுக்கு அருகில் உள்ள உமாராணி என்ற உறவினா் வீட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தனா். மகன்களை அழைத்துச் செல்ல ஷகிலா பானு உறவினா் வீட்டுக்கு வந்த போது வீட்டின் பின்புறத்திலிருந்த கழிவுநீா் தொட்டியில் மோகநந்தன் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
உடனடியாக மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மோகநந்தனை கொண்டு சென்று போது அச்சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் தொடா்பாக சுங்குவாா் சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.