போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில்...
கழிவுநீா் வாய்க்கால் இல்லாததால் இந்திரா நகா் பொதுமக்கள் அவதி
கரூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 42-ஆவது வாா்டில் சாலை மற்றும் கழிவுநீா் வாய்க்கால் இல்லாததால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-ஆவது வாா்டில் தமிழ்நகா், இந்திரா நகா் குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
தமிழ்நகா், இந்திரா நகா் குடியிருப்புகள் உருவாகி சுமாா் 12 ஆண்டுகளாகியும் இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் வாய்க்கால்கள் அமைக்கப்படவில்லை. இதனால் சாலைகளில் கழிவு நீரை வெளியேற்றுவதால் துா்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லை ஏற்படுவதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.
மேலும் இரு நகரிலும் உள்ள சாலைகள் மண் சாலைகளாகவும், குண்டும், குழியுமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். தமிழ்நகரில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மழைக்காலங்களில் மழைநீரில் தவறிவிழுகின்றனா்.
ஆகவே, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட இப்பகுதியில் தாா்ச்சாலை வசதியும், கழிவு நீா் வாய்க்கால் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.