US: ``நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன், ஆனால்..'' - அமெரிக்காவில் சசி தரூர...
கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து
சிவகாசியில் சனிக்கிழமை கழிவுப் பொருள் கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே சிரஞ்சீவிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான கழிவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. இந்தக் கிட்டங்கியில் தீப்பெட்டிக் கழிவுகள், காகித கழிவுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கிட்டங்கியில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் கிட்டங்கியிலிருந்த தீப்பெட்டிக் கழிவுகள், காகித கழிவுகள் எரிந்து சேதமடைந்தன.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.