செய்திகள் :

கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா' கேட்ட மாஜி - கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்

post image

வழக்குகளால் பதவியை இழந்த மாஜியார், தொடர்ந்து விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி ஸ்கோர் செய்கிறாராம். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்தில் பெரும் விழாவை நடத்திய அவர், அடுத்ததாக மான்செஸ்டர் மாவட்டத்தில் இளைஞரணி நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறாராம்.

‘இது எங்களுக்கான நிகழ்ச்சி. நிர்வாகிகளை வைத்தே நடத்திக்கொள்கிறோம்...’ என்று இளம் தரப்பிடமிருந்து பதில் வந்தாலும், ‘என் பங்குக்கு நானும் ஏதாவது செய்கிறேனே...’ என்று வான்ட்டடாக வாலன்டியர் செய்கிறாராம் அந்த மாஜி. இந்த நிலையில், புதிய பாலம் திறப்பு விழா சர்ச்சையாகியிருக்கும் நேரத்தில், அந்தப் பாலம் தொடர்புடைய சமூகப் புள்ளிகளிடம், ‘பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா நடத்துவதாக அறிவிங்க... மிச்சத்தை நான் பார்த்துகிறேன்...’ என்று டீல் பேசினாராம் மாஜி. ஆனால், ‘என்னது பாராட்டு விழாவா... ஆளை விடுங்க...’ என்று அவர்கள் தெறித்து ஓடியிருக்கிறார்கள். ‘இவருபாட்டுக்கு நிகழ்ச்சியா நடத்தி, நாம சும்மா இருக்கிறோம் என்று பெயர் வாங்கிக்கொடுக்கிறாரே...’ என்று கடுப்பாகிறார்களாம் சூரியக் கட்சியின் இதர சீனியர்கள்!

டெல்டா மாவட்டம் ஒன்றில், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளரின் பெயர் இடம்பெறவில்லையாம். ‘மாவட்ட ஜூனியர் அமைச்சரின் உள்ளடியால்தான் இது நடந்திருக்கிறது...’ என்று ஏகத்துக்கும் கொதித்துவிட்டார்களாம் மா.செ-வின் ஆதரவாளர்கள்.

அதனால் பதறிய அமைச்சர் தரப்பு, புதிதாக மா.செ-வின் பெயருடன் சொற்ப அளவில் தனியே அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் மா.செ புறக்கணித்துவிட்டாராம். ‘இந்த விஷயத்தில் அவர்கள் இருவருக்குமிடையே சமாதானம் செய்துவைக்க, மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் முயன்றும் புகைச்சல் அடங்கவில்லை. இப்போது பனிப்போர் உச்சமாகி வீதிக்கு வந்து, முதன்மையானவர் காது வரைக்கும் பிரசனை சென்றுவிட்டது’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்!

மலர்க் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் புதிதாக வந்திருப்பவர், பழைய தலைமையின் ஆதரவாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவருகிறார். அந்த வகையில், அவார்டு மாவட்டத்தில் மகாபாரத முக்கியப் பாத்திரத்தின் பெயரைக்கொண்ட நிர்வாகி, முற்றிலும் ஓரங்கட்டுப்பட்டுவருகிறாராம்.

‘அந்த மாவட்டத்துக்குத் தலைவர் வருகிற தகவல்கூடச் சொல்லப்படுவதில்லை. மாவட்டப் பொறுப்புகளுக்கு, அவர் கொடுத்த சிபாரிசுப் பட்டியலையும் ஓரமாகப் போட்டுவிட்டார்கள். அவரின் ஆதரவாளர்கள் ஒருவருக்குக்கூட போஸ்ட்டிங் போடவில்லை. இது குறித்து மனம்விட்டுப் பேச நேரம் கேட்டும், தலைமை நேரம் ஒதுக்கவில்லை. இதில் அதிருப்தியான மாவட்ட நிர்வாகி, கட்சியிலிருந்து விலக முடிவுசெய்து, தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பவிருக்கிறார்’ என்கிறார்கள் மலர்க் கட்சியின் சீனியர்கள்!

உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாகத் தமிழக அரசுக்குக் குட்டு விழுந்துவரும் இந்தச் சூழலில், டி.ஜி.பி நியமனம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் குட்டு வாங்க ஆட்சி மேலிடம் தயாராக இல்லையாம். ‘சட்டரீதியான நடைமுறைகளை விரைந்து செய்யுங்கள்...’ என்று முதன்மையானவர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ‘யூ.பி.எஸ்.சி கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தின் சீனியர் அதிகாரிகள், இறுதி முடிவுக்கான அறிக்கையில் கையெழுத்து போடவில்லை.

அவர்கள் மீண்டும் டெல்லிக்குச் சென்று கையெழுத்து போட்டால்தான், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்...’ என்று விவகாரத்தை இழுக்கப் பார்க்கிறார்களாம் சில அதிகாரிகள். ‘அந்த அதிகாரிகள் குழப்பிவிடுவதை இனியும் ஆட்சி மேலிடம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது... இப்படியே போனால் குட்டு விழுவதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார்கள் கோட்டையிலுள்ள சீனியர் அதிகாரிகள்!

அல்வா மாவட்ட காவல்துறைமீதான விமர்சனத்தோடு அடிக்கடி செய்திகள் வெளியாவதால், டி.ஜி.பி அலுவலகத்திலிருந்தும், ஐ.ஜி அலுவலகத்திலிருந்தும் விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்களாம். ‘உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. பதற்றமான மாவட்டம், கொஞ்சம் அப்படி இப்படித்தானே இருக்கும்...’ என்று மாவட்ட காவல் அதிகாரி அசால்ட்டாகப் பதிலளிக்க, மேலதிகாரிகள் டென்ஷனில் கத்திவிட்டார்களாம்.

இதில், மாவட்ட அதிகாரி டோட்டல் அப்செட்டாம். டோஸ் விழுவதைச் சமாளிக்க, ‘மாவட்டத்திலுள்ள முக்கியமான இன்ஃபார்மர்கள், பிரஸ் ஆட்களை நேரில் அழைத்து, ‘உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எனக்கு பர்சனலாகச் சொல்லுங்கள்... பார்த்துக்கொள்ளலாம்...’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் அந்த மாவட்ட அதிகாரி. அந்தத் தகவலும் மேலிடத்துக்குச் செல்லவே, ‘இப்படி யாராவது கோரிக்கை வைப்பார்களா... ஏன் இந்தத் தேவையில்லாத வேலை...’ என வறுத்தெடுத்துவிட்டார்களாம் மேலதிகாரிகள்!

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய ... மேலும் பார்க்க

Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சே... மேலும் பார்க்க

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த ... மேலும் பார்க்க

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவ... மேலும் பார்க்க

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக... மேலும் பார்க்க

இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளியுறவுத் துறை பதில்

'இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரி... மேலும் பார்க்க