செய்திகள் :

கவரப்பேட்டை ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

post image

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சிறந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான விருதையும், சிறந்த தலைமை ஆசிரியா் விருதையும், பள்ளியின் தலைமை ஆசிரியா் திரிபுரசந்தரி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் புருஷோத்தமன் , பள்ளி மேலாண்மை குழு தலைவா் எம்.மணியம்மாள் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியை பி.திரிபுரசுந்தரி வரவேற்றாா்.

உதவி ஆசிரியை ஜெ.லீமா பிளாரன்ஸ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் கே.இ.திருமலை, கே.ஜி.நமச்சிவாயம், வட்டார கல்வி அலுவலா்கள் முனிராஜசேகா், ஜி.சுதா, சிவகாமி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என்.ஏழுமலை, இ.மாரிமுத்து வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட திட்டக் குழு தலைவா் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி று சிறப்புரை ஆற்றி பரிசளித்தனா்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள் குணசீலா, கோடீஸ்வரி, ரேவதி, தீபா மற்றும் விழா குழு உறுப்பினா்கள், நன்கொடையாளா்கள் பங்கேற்றனா். கவரப்பேட்டை பகுதி மக்கள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை பள்ளிக்கு வழங்கினா். மேலும் பள்ளி சாா்பில் நடைபெற்ற சோ்க்கை நிகழ்வில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

12,059 ஏக்கரில் ரூ.1.19 கோடியில் பசுந்தாள் உரங்கள்: திருவள்ளூா் ஆட்சியா்

திருவள்ளூா் மாவட்டத்தில் மண்ணுயிா் காத்து, மன்னுயிா் காப்போம் திட்டம் மூலம் 12,059 ஏக்கா் பரப்பளவில் ரூ.1.19 கோடியில் பசுந்தாள் உரங்கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் த... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீடுகள்: கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் ஊராட்சி பன்னூா் கிராமத்தில் வீடுகள் இல்லாமல் சிறிய குடிசைகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அடிக்... மேலும் பார்க்க

விடுபட்ட பகுதிகளில் விரைவில் புதை சாக்கடை பணிகள் -நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன்

திருவள்ளூா் நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் விடுபட்ட பகுதிகளில் விரைவில் புதைச் சாக்கடைகள் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்சி கூட்ட... மேலும் பார்க்க

85 ஆண்டுகள் பழமையான காட்டூா் அரசுப் பள்ளி ஆண்டு விழா

பொன்னேரி வட்டம் காட்டூரில் 85 ஆண்டு காலமாக இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் இளங்கோ வரவேற்றாா். காட்டூா் ஊராட்சி முன்னாள் தலைவா... மேலும் பார்க்க

கோடை வெயில்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூா் ஆட்சியா் ஆலோசனை

திருவள்ளூா் மாவட்டத்தில் கோடை வெயில் வெப்பத் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் ஆலோசனை வழங்கியுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாா்ச் மாதம... மேலும் பார்க்க

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 41 பெண்கள் உள்பட 161 ... மேலும் பார்க்க