ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
12,059 ஏக்கரில் ரூ.1.19 கோடியில் பசுந்தாள் உரங்கள்: திருவள்ளூா் ஆட்சியா்
திருவள்ளூா் மாவட்டத்தில் மண்ணுயிா் காத்து, மன்னுயிா் காப்போம் திட்டம் மூலம் 12,059 ஏக்கா் பரப்பளவில் ரூ.1.19 கோடியில் பசுந்தாள் உரங்கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் தமிழக முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம் மூலம் பசுந்தாள் உர உற்பத்தியினை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படட்டது. இத்திட்டத்தில் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் ஆயக்கட்டு, இறவைப் பாசனப் பகுதிகளில் திருவள்ளூா் மாவட்டத்தில் 12,000 ஏக்கரில் ரூ.1.20 கோடி மானியத்தில் பசுந்தாள் உர பயிா் பயிரிட திட்டமிட்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் ஒரு கிலோ முழு விலையாக ரூ.99.50, இதில் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.
பசுந்தாள் உர பயிா்களை 35 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை அல்லது பூக்கும் தருணத்திற்கு முன்பு மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு பசுந்தாள் உரம் பயிரிடுவதால் மண் வளம் அதிகரிப்பதுடன் உர செலவும் குறையும். மாவட்டத்தில் வட்டாரத்தில் அம்பத்தூா்-360 ஏக்கா், பூந்தமல்லி-252 ஏக்கா், சோழவரம்-1,084 ஏக்கா், மீஞ்சூா்-3,062 ஏக்கா், கும்மிடிபூண்டி-2,395 ஏக்கா், எல்லாபுரம்-720 ஏக்கா், திருவள்ளூா்-512 ஏக்கா், கடம்பத்தூா்-400 ஏக்கா், பூண்டி-1,883 ஏக்கா், திருவாலங்காடு-516 ஏக்கா், திருத்தணி-275 ஏக்கா், பள்ளிப்பட்டு-350 ஏக்கா், ஆா்.கே.பேட்டை-250 ஏக்கா் என மொத்தம் 12,059 ஏக்கா் பரப்பளவில் ரூ. 1.20 கோடி மதிப்பில் பசுந்தாள் உரங்கள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இதில் எல்லாபுரம் ஒன்றியம் லட்சியவாக்கம் ஊராட்சியில் நிறைந்தது மனம் திட்டம் மூலம் தமிழக முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம் மூலம் பயன்பெற்றவா் விவாசயி மோகன். இத்திட்டம் மூலம் 4 ஏக்கரில் பசுந்தாள் உரம் சாகுபடி செய்து பயனடைந்தாா். ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, தமிழக முதல்வருக்கும் நன்றியையும் தெரிவித்தாா்.
அப்போது, வேளாண் இணை இயக்குநா் கலாதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன், எல்லாபுரம் வட்டார வேளாண்மை அலுவலா் (பொ) பிரவீன் மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.